பிரித்தானியர் இலங்கையைக் கைப்பற்றுதல் | இலங்கையின் இனவாத அரசியல் - ஒரு வரலாற்றுப் பார்வை | பி.ஏ. காதர்
Description
இலங்கை இந்தியாவுக்கு அருகில் இருந்தபடியாலும் - இரு பருவ காற்றின் போதும் பாதுகாப்பாக கப்பல்களை நிறுத்தக்கூடிய - உலகின் இரண்டாவது பெரிய ஆழ்கடல் இயற்கை துறைமுகமான திருகோணமலை துறைமுகம் இங்கிருந்தபடியாலும் காலனியல் போட்டியில் இலங்கையின் முக்கியத்துவம் அதிகரித்தது.
ஒல்லாந்தர் போர்த்துகேயரிடமிருந்து இலங்கையின் கரையோரங்களை கைப்பற்றியதற்கு இலங்கையில் விளையும் கறுவா ஒரு காரணமாக இருந்தாலும் இந்தியாவில் தமது நிலைகளைக் காப்பாற்றிக்கொள்வதற்கு திருகோணமலை துறைமுகத்தின் தேவையும் மற்றொரு முக்கிய காரணமாக அமைந்தது.
கண்டி தனி இராச்சியமாக தொடர்வதையிட்டு பிரித்தானியா அதிகம் அலட்டிக்கொள்ளவில்லை. அவர்களுக்கு ஆசியாவில் விரிந்து செல்லும் அவர்களது சாம்ராச்சியத்தின் பாதுகாப்புக்கு இலங்கையின் கரையோரப்பகுதிகள் தேவைப்பட்டன. ஆனால், நாயக்க வம்ச ஆட்சியில் அதிருப்தியுற்றிருப்பதாக காட்டிக்கொண்டு அரியணையின் மீது குறிவைத்திருக்கும் அதிகார அடுக்கில் மன்னனுக்கு அடுத்த இடத்தில் இருந்த மகா அதிகாரம் பிலிமத்தலாவையுடன் தொடர்பை ஏற்படுத்தி அவனது ஆதரவைப் பெற்றுக்கொண்டதால் பெரிதும் உற்சாகமடைந்த ஆள்பதி ஃபிரடெரிக் நோர்த் கண்டி இராச்சியத்தை கைப்பற்ற முடிவெடுத்தார்.
1803 ல் பெரும் படையெடுப்பால் ஆள்பதி ஃபிரடெரிக் நோர்த் சாதிக்காததை ஒரு துளி இரத்தம் கூட சிந்தாமல் ஒரு தோட்டாவைக்கூட செலவழிக்காமல் ஆள்பதி ரொபர்ட் பிரவுன்ரிக் 1815ம் ஆண்டு பெப்ரவரி 14ம் திகதி பிரித்தாளும் சதியால் - இனவாதத்தின் துணையோடு - சாதித்தார்.